முன்னாள் பொருளாலரான அவரின் நியமனத்தை, ம.இ.கா தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தியது.
2024-2027 ஆம் தவணைக்கான ம.இ.காவின் தேசியப் பொதுச் செயலாளராக டத்தோ Dr எஸ்.ஆனந்தன் அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டத்தோ என்.சிவகுமார், தேசியப் பொருளாளராகியுள்ளார்.
தகவல் பிரிவுத் தலைவராக டத்தோ ஏ.கே.ராமலிங்கமும், ம.இ.கா கட்டிட குழுத் தலைவராக டத்தோ என்.ரவிசந்திரனும் பொறுப்பேற்கின்றனர்.
தேசிய அமைப்புச் செயலாளராக டத்தோ என்.முனியாண்டியும், தேசிய வியூக அதிகாரியாக இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.தீனாளனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஊடகப் பிரிவுக்கு எல்.சிவசுப்ரமணியம் தலைமையேற்கும் வேளை, ம.இ.காவின் நிர்வாகச் செயலாளராக டத்தோ Dr.ஏ.டி.குமார ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ம.இ.கா கட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களோடு, புதிதாக நியமனம் பெற்றவர்களும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேசியத் தலைவர், துணைத் தலைவரோடு இணைந்து கட்சியை நிர்வகிப்பர்.