கோலாலம்பூர், ஏப்ரல் 7 – 2024 முதல் 2027 ஆம் ஆண்டு தவணைக்கான ம.இ.கா-வின் இளைஞர் பிரிவு தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேசிய தலைவர் பதவிக்கு அர்விந்த் கிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை ஈடுசெய்யும் வகையில் தமது இளைஞர் பிரிவு முனைப்பு கொண்டுள்ளதாக, தற்போது ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளராக இருக்கும் அர்விந்த் குறிப்பிட்டார்.
இதனிடையே, இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குக் கேசவன் கந்தசாமி போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
கட்சியில் பிளவு ஏற்படாமல் இருவரும் ஒன்றிணைந்து சமூகத்தை பலப்படுத்தச் செயலாற்றுவோம் என அர்விந்த் நம்பிக்கையுடன் கூறினார்.