ஜோகூர் பாரு, பிப் 14 – ம.இ.கா பணிப்படையின் மாபெரும் அறிமுக விழா நேற்றிரவு ஜோகூர் பாரு EDU CITY யில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA வினேஸ்வரன் அந்த நிகழ்வை அதிகாரப்பூர்மாக தொடக்கிவைத்தார்.
ம.இ.காவின் மறுமலர்ச்சிக்கு பிரிகேட் எனப்படும் பணிப்படை பெரும் பெரும் பங்காற்றும் என விக்னேஸ்வரன் தமதுரையில் தெரிவித்தார். ஜோகூரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் முக்கியமான காலக்கட்டத்தில் பணிப்படையின் அறிமுக விழா நடைபெறுகிறது. அனைவரையும் அரவணைத்து ம.இகா செயல்பட்டால் அரசாங்கத்திடமிருந்து அதிகமான வாய்ப்பு வசதிகளை பெறமுடியும் என அவர் கூறினார். இந்தியர்களின் உரிமைக்காக போரடக்கூடிய ஒரே கட்சியாக ம.இ,கா மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தான் ஆடாவிட்டால் தன் சதை ஆடும் என்ற உணர்வுக்கு ஏற்ப இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்காக போராடும்,குரல் எழுப்பும் ஒரே கட்சியாக ம.இ.கா மட்டுமே இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், ஜோகூர் மந்திரிபுசார் டத்தோ Hasni Mohamad, தற்காப்பு அமைச்சர் Hishamudin Hussein , தேசிய முன்னணி தலைவர்கள், ம.இ.கா தலைவர்கள் உட்பட நாடு தழுவிய நிலையில் பிரிக்கேட் படை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.