Latestமலேசியா

ம.இ.கா மத்திய செயலவை குணசீலன் – வீரன் முதல் 2 இடங்களில் வெற்றி

கோலாலம்பூர், நவ 27 – ம.இ.கா மத்திய செயலவைக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் கொண்ட பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த குணசீலன் ராஜூ மற்றும் பேராவின் வீரன் வெற்றி பெற்றனர். ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் அங்கீகாரத்தைப் பெற்ற வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோர் வெற்றி பெற்றனர். இம்முறை போட்டி கடுமையாக இருந்தபோதிலும் சகோதர உணர்வோடு போட்டி இருந்ததோடு பிரச்சாரமும் சுமுகமாக இருந்ததாக மத்திய செயலவையில் முதல் இடங்களைப் பெற்ற குணசீலன் ராஜூவும் பேராவைச் சேர்ந்த வீரனும் தெரிவித்தனர்.

மாநில ரீதியில் பேராளர்களை சந்தித்து வாக்குத் திரட்டுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது மகிழ்ச்சியை தந்ததாக அவ்விருவரும் தெரிவித்தனர். மத்திய செயலவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் முடிவுகளை ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்தார்.

ம.இ,கா மத்திய செயலவைக்கு 35 பேர் போட்டியிட்னர். இவர்களில் வெற்றி பெற்ற 21 பேரின் பெயர்கள்   மற்றும் வாக்குகளின் விவரங்கள் வருமாறு.

1. Gunaseelan Rajoo 11,535
2.M. Veeran 11.509
3.Subramaniayam
Karuppaiyah (Klang ) 11,423
4. D. Tharmakumaran 11,284
5. CikGu Bala 11,253
6.P. kamalanathan 10,830
7.K.R. Parthiban 10,761
8 Vincent (SG .SIPUT) 10.720
9.Tamilvanan Sundral 10,614
10.Suppaiyah (Johor) 10,439
11.Mathurai veeran
Mathu Marimuthu 9,778
12.Dato S.M. Muthu 9,636
13 Ampang Dato Muniyandy 9.153
15.Siva G .Pagoh 8,996
16.Datuk M. karuppanan 8889
17.Sathasivam Kalimuthu 8,571
18.Datuk R.Subramaniyam 8.547
19.R. Rajandran 8,460
20. Raman Govinda Nair 8.397
21. R.T Raja ( Lawyer ) 8,334

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!