
சுங்கை சிப்புட், ஆக 23 – ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளை மற்றும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் பாலர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் நிகழ்வு சுங்கை சிப்புட் நகராண்மை கழக மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சுமார் 300 மாணவர் கலந்து கொண்ட இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட பெற்றோர்களுடன் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களுக்கான இந்த நிகழ்ச்சியோடு பெற்றோர்களுக்கான கேளிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இவ்விழாவில் பாகான் செராய் தொகுதி தலைவர் உயர்திரு கே.எல் மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதோடு ம.இ.கா இது போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வரவேற்கத்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார். சுங்கை சிப்புட் வட்டாரத்தில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவரும் ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளையின் தலைவர் வீ.சின்னராஜூ மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் கே.எல்.மூர்த்தி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பிறந்த நாள் கண்ட ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளையின் உறுப்பினர் அனைவருக்கும் அணிச்சல் வெட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 9 வருடங்களாக நடைபெற்று வரும் மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிவரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் சுங்கை சிப்புட் இந்தியர் சங்கத்தின் தலைவருமான சின்னராஜூ தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொணடார். இந்த நிகழ்வில் ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதியின் சார்பில் அதன் செயலாளர் திரு.அசோக்குமாரும் கலந்து கொண்டார்.