![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/AN_34b76image_story.jpg)
வியட்நாம், செப்டம்பர் 10 – வியட்நாமில், யாகி சூறாவளியால் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து, Phu Tho மாகாணத்திலிருந்த Phong Chau பாலம் இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தின் பதிவுகள் வாகனம் ஒன்றின் டேஷ் கேமில் பதிவாகிய நிலையில், அந்த நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தில், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகாத நிலையில், மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 13 பேரைத் தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Hong ஆற்றைக் கடக்கும் அந்த பாலம், Lam Thao மாவட்டத்தையும் Tam Nong மாவட்டத்தையும் இணைக்கிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரு மாவட்டங்களையும் இணைக்கத் தற்காலிக பாலம் அமைக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்படப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை வியட்நாமை தாக்கிய யாகி சூறாவளியினால், இதுவரை மரண எண்ணிக்கை 60க்கு மேல் பதிவாக்கியுள்ள நிலையில், சுமார் 240 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த வலுவான சூறாவளியினால், பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.