Latestமலேசியா

யானை தந்தத்தினால் குத்தி தாக்கியதில் தோட்ட தொழிலாளி மரணம்

குவா மூசாங், மே 13 – Gua Musang . Pos Blau விலுள்ள Kampung Om மில் தோட்ட தொழிலாளர் ஒருவரை யானை தந்தத்தினால் குத்தி தாக்கியதில் மரணம் அடைந்த நிலையில் கண்டுப் பிடிக்கப்பட்டார். நேற்று மாலை மணி 5 அளவில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 29 வயதுடைய வங்காளதேச தொழிலாளியை யானை தாக்கியுள்ளது. அதோடு அந்த தொழிலாளியின் வயிற்றில் யானை மிதித்ததற்கான காயமும் காணப்பட்டதாக Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் Sik Choon Foo தெரிவித்தார்.

தங்களது தோட்டத்திலிருந்து தொழிலாளர்கள் திரும்பிவரும்போது மலைப்பகுதியிலிருந்து யானை ஒன்று திரும்பி வந்துள்ளது. அதைக் கண்டு தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடியபோதிலும் Md Nawsher Ali என்ற தொழிலாளி யானையிடம் சிக்கிக் கொண்டார் என இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக Sik Choon Foo கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!