
கெமமான்,பிப் 16 – கெமமான் உயிரியல் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் யானை தாக்கியதில் அதன் பராமரிப்பாளரான 37 வயதுடைய ஆடவர் காயம் அடைந்தார். 1.5 டன் எடையுள்ள 13 வயதுடைய யானையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென சற்றும் எதிர்பார்க்கமால் அந்த யானை தம்மை தாக்கியதாக Musbaha Din கூறினார். அந்த யானையின் தந்தங்களில் ஒன்று வயிற்றில் குத்தியதால் ஏட்பட்ட காயத்திற்கு 15 தையல் போடப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது வயிற்றில் யானையின் மற்றொரு தந்தம் பாய்ந்திருந்தால் து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் கூறியிருந்ததையும் Musbaha din சுட்டிக்காட்டினார். கடந்த 11 ஆண்டு காலமாக அந்த யானையை பராமரிக்கும் பணியில் தாம் ஈடுபட்டு வந்ததாகவும் முதல் முறை அதன் தாக்குதலுக்கு உள்ளானதை மறக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.