மனௌஸ், மார்ச் 3 – வீட்டிலிருந்து தப்பியோடி விமானத்தின் வாயிலாக 1, 675 மைல் தூரம் பயணித்திருக்கும் ஒன்பதே வயது நிரம்பிய சிறுவனின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அதுவும், யாருக்கும் தெரியாமல் விமானத்திற்குள் எப்படி நுழைவது என இணையத்தின் வாயிலாக அச்சிறுவன் கற்றுக் கொண்ட விஷயம் தான் பெற்றோருக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. வியப்பூட்டும் அந்த சம்பவம் பிரேசில் மனௌஸ் ( Manaus ) பகுதியில் நிகழ்ந்திருக்கிறது.
இமானுவேல் மார்க்வெஸ் டி ஒலிவேரா (Emanuel Marques de Oliveira) எனும் அந்த சிறுவன் , யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் விமானத்தில் எப்படி பறந்து செல்ல முடிந்தது என்ற குழப்பத்தில் தற்போது போலீசார் உள்ளனர்.