பிரிட்டன், பிப் 21- பெரும் சீற்றமெடுத்த Eunice புயல் ஐரோப்பிய நாடுகளில் பெருத்த சேதங்களை ஏற்படுத்தியதோடு, அந்த இயற்கை பேரிடருக்கு குறைந்தது 16 பலியாகியிருக்கின்றனர்.
பெல்ஜியும், நெதர்லாந்து, ஜெர்மனி, போலந்து, அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில், அந்த அசூர காற்றினால் இறப்புகள் பதிவாகியுள்ளன. லட்சக்கணக்கான வீடுகளிலும், வர்த்தக தளங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் தடைப்பட்டது.
இவ்வேளையில், உயர் அலைகளால் வடகடல் பகுதியில், கப்பலில் இருந்து காணாமல் போன 26 காலி கொள்கலன்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக நெதர்லாந்து கடற்பாதுகாப்பு துறையினர் கூறியுள்ளனர்.