கோலாலம்பூர், ஜூலை 26 – கெடாவில் யு.யு.எம் பல்கலைக்கழக வளாகத்தின் தங்கும் விடுதியில் கிள்ளானைச் சேர்ந்த மாணவி வினோஷினி சிவகுமார் மரணம் அடைந்தது தொடர்பில் மரண விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தின் வழக்கறிஞரான மனோகரன் மலையாளம் கேட்டுக்கொண்டார். அப்பல்கலைக்கழத்தில் கணக்கியல் துறை மாணவியான 21 வயதுடைய வினோஷினி கடந்த மே மாதம் 23ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் மரணம் அடைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்ட போதிலும் இன்னும் மரண விசாரணை நடத்தப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக மனோகரன் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close