
16 வயது யுவதியை கற்பழித்ததோடு, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும், போலீஸ் அதிகாரிக்கு, சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படாது.
அவருக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, யான் போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் ஷானாஸ் அக்தார் ஹஜி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக நேற்று சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், நீதிமன்றத்திற்கு வந்த, 35 வயது இன்ஸ்பெக்டர் முஹமட் மாலிகி அஸ்மி எனும் அந்நபர், பத்திரிக்கையாளர் பார்வையிலிருந்து தப்பினார்.
சுங்கை பட்டாணி நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் பத்திரிகையாளர்கள் சிறு குழுவினராக பிரிந்து காத்திருந்த போதும், அவரை காண முடியவில்லை. மாலிகின் உத்தரவாத் தொகையை அவரது மனைவி செலுத்திய வேளை ; அங்கும் அவர் தென்படவில்லை.
யான் போலீஸ் தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான மாலிகி, நீதிமன்றத்தில் தமக்கு தெரிந்த சிறப்பு வழிகளை பயன்படுத்தி யார் கண்ணிலும் படாமல் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டது பின்னர் தெரிய வந்தது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி, மாலை மணி 6.30 வாக்கில், யான் போலீஸ் தலைமையகத்திலுள்ள விசாரணை அறையில், 16 வயது மதின்ம வயது பெண்ணை கற்பழித்ததோடு, பாலியல் பலாத்காரம் செய்தததாக நான்கு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.