Latestமலேசியா

யூனிமாசில், நண்பரின் தோளில் லாவகமாக அமர்ந்து, உயரமான சலவை இயந்திரத்தில் துணிகளை போடும் நபர் வைரல்

கோலாலம்பூர், நவம்பர் 21 – யுனிமாஸ் – மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்திலுள்ள, சலவை நிலையத்தில் அண்மையில் பதிவுச் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வைரலாகி, சமூக ஊடகங்களை கலக்கி வருகிறது.

அப்படி என்னதான் நடந்து என்கிறீர்களா?

நபர் ஒருவர் தனது நண்பரின் தோல் மீது அமர்ந்து, உயரமான சலவை இயந்திரத்தில் துணிகளை போட்டது தான் அதற்கு காரணம்.

துணி துவைக்க வேண்டும் எனும் அவர்களின் எண்ணம் சாதாரணமாக தோன்றினாலும். அதற்கு அவர்கள் கையாண்ட விதம் சற்று வித்தியாசமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது.

உயரமான இடத்தில் ஏறுவதற்கு தேவையான ஏணி அருகில் வைக்கப்பட்டிருந்த போதும், அவ்விரு நண்பர்களும் அதனை பொருட்படுத்தவில்லை. அவர்களில் ஒருவர் மற்றொருவர் தோள் மீது ஏறி அமர்ந்து சலவை இயந்திரத்தில் துணிகளை நிரப்புகிறார்.

சற்று நேரத்தில், நண்பரை சுமந்து நின்றவர், மீண்டும் மெல்ல கீழே குணிந்து இதர துணிகளை எடுத்து மேலுள்ளவரிடம் கொடுப்பதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.

அந்த காணொளியை ரசாலி என்பவர் தனது @izxannhaha எனும் டிக் டொக் கணக்கில் பதிவிட்டதை தொடர்ந்து, அது வைரலாகி நேர்மறையான கருத்துகளை குவித்து வருகிறது.

பலர் அச்செயலை கேலி செய்தாலும், நெருங்கிய நட்புக்கு இலக்கமாக தெரியும் அச்செயலை பெருப்பாலானோர் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!