Latestசினிமா

யூ டியூப் பக்கத்தைத் தொடங்கிய இளையராஜா; முதல் வீடியோவே ‘புன்னகை மன்னன்’ பின்னணி இசை

சென்னை, நவம்பர்-20 – ஏற்கனவே அறிவித்த படி, இசைஞானி இளையராஜா தனது YouTube பக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

அதற்கு ‘Ilayaraaja BGM Official’ என பெயரிடப்பட்டுள்ளது.

முதல் வீடியோவாக ‘புன்னகை மன்னன்’ படத்தின் புகழ்பெற்ற பின்னணி இசையை அவர் பகிர்ந்துள்ளார்.

அவ்வீடியோ இதுவரை 90,000 பார்வைகளைப் பெற்றுள்ள வேளை, 27-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பக்கத்தை subscribe செய்துள்ளனர்.

காலத்தால் அழியாத தனது இசைக்கோர்ப்புகளையும், பாடல்களையும், பின்னணி இசையையும் அப்பக்கத்தில் இனி அவர் வெளியிடவுள்ளார்.

இரசிகர்கள் கேட்டு இன்புறுவதற்காக இசை கச்சேரி, சிம்பொனி இசையும் அங்கு பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!