கோலாலம்பூர், பிப் 16 – ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் Yong Peng , Pekan Nenas உட்பட ஆறு தொகுதிகளை கைப்பற்ற முடியும் என ஜோகூர் ம.சீ.ச நம்பிக்கை கொண்டிருப்பதாக அக்கட்சியின் ஜோகூர் மாநில செயலாளர் NG Keng Heng தெரிவித்தார்.
நிலையான அரசாங்கம் ஜோகூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என்பதோடு சிறந்த வர்த்தக வாய்ப்புக்களையும் உருவாக்கும் என அவர் கூறினார். ம.சீ.வுக்கு சீனர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால் இம்முறை ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் ம.சீ.சவின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக NG Keng Heng குறிப்பிட்டார்.