Latestஉலகம்

ரகசியமாக கடற்படை தளம் நிர்மாணிப்பா ? சீனா – கம்போடியா மறுப்பு

நொம்பென். ஜூன் 8 – சீனக் கப்பல்களுக்காக கம்போடியாவில் ரகசிய கடற்படைத் தளம் நிர்மாணிக்கப்படுவதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் Anthony Albanese கூறியிருக்கும் குற்றச்சாட்டை கம்போடியாவும் சீனாவும் மறுத்துள்ளன. இந்த தகவல் உண்மையாக இருக்குமானல் இவ்வட்டாரத்திற்கு அந்த நடவடிக்கை பெரும் மிரட்டலாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். கம்போடியாவின் தாய்லாந்து வளைகுடாவில் உள்ள Ream தளத்தில் சீன கடற்படை கப்பல்களுக்காக அந்த கடப்படைத் தளம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மேற்கத்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமரின் அந்த குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று என கம்போடிய துணைப் பிரதமர் Prak Sokhon தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!