Latestமலேசியா

ரகசிய கொண்டாட்டம்; கள்ளத்தனமாக பயணம்- திரெங்கானுவில் கோவிட் உயர்வு

குவாலா திரெங்கானு, ஆகஸ்ட் 1- ரகசியமாக நடத்தப்பட்ட சமூக நிகழ்ச்சிகள் உட்பட மேலும் சில  காரணங்களால்,  திரெங்கானுவில் கோவிட் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக, அம்மாநில மெந்திரி பெசார்  அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

தியாகத்திருநாள் கொண்டாட்டத்தின் போது SOP- நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதது, கள்ளத்தனமாக மாநிலம் மாவட்டம் கடந்தது ஆகிய காரணங்களும், தொற்று அதிகரிப்புக்கு காரணமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

திரெங்கானுவில் நேற்று மட்டும் 883 புதிய  கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின.  கோவிட் தொற்று பரவத்  தொடங்கியது முதல், அம்மாநிலத்தில் பதிவான உயர்வான எண்ணிக்கை அதுவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!