கோலாலம்பூர், டிச 31 -OPCW எனப்படும் ரசாயன ஆயுதங்களை தடைசெய்யும் இயக்கத்தின் அறிவியல் ஆலோசனை வாரியமான SABக்கு நிபுணராக
மலேசியாவின் ராஜா சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். ரசாயன ஆயுதங்களுக்கான மாநாட்டிற்கான மலேசிய தேசிய வாரியத்தின் துணை செயலாளருமான ராஜா, ஆசிய வட்டாரத்திலிருந்து ரசாயன ஆயுதங்கள் தடைசெய்யும் இயக்கத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு நிபுணர்களில் ஒருவராக திகழ்கிறார் என வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை SAB இயக்கத்தின் நிபுணராக ராஜா இருந்துவருவார். ரசாயன ஆயுதங்கள் தொடர்பான விவகாரங்களில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திகழ்கிறார். தேசிய சுவிடன் ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து இரசாயன ஆயுத பகுப்பாய்வில் ராஜா சுப்ரமணியம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.