
சென்னை, மார்ச் 30 – மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் – 2 படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக கோலகலமாக நடைபெற்றது.
பல திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அந்த விழாவில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது.
3 நிமிடங்கள், 34 வினாடிகள் ஓடும் இரண்டாம் பாக டிரைலர், படத்தின் முதலாம் பாக முடிவிலிருந்து தொடங்குகிறது.
சோழ தேசத்தில் நடக்கும் அரசியல் ஆட்டம், நந்தினியின் பழிவாங்கும் படலம் , நாட்டைக் காப்பாற்ற ஆதித்த கரிகாலன் , அருண்மொழி வர்மன், குந்தவை ஆகியோர் நடத்தும் போராட்டம் என பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் நகரவிருக்கின்றது.
மிக விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28- ஆம் தேதி திரையரங்குகளை நாடவிருக்கின்றது