சென்னை, பிப் 2 – நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் தனக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதோடு, சிகிச்சை பெறும் தனது புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும், தங்களின் 18 ஆண்டுகால திருமண பந்தந்தில் இருந்து பிரிவதாக அண்மையில் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அறிவிப்பை தொடர்ந்து , படப்பிடிப்பு பணிகளில் ஐஸ்வர்யா தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.