
சென்னை, ஜன 21 – ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படம் தொடர்பான புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்தில் புதிதாக நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக தமன்னா இணையும் நிலையில், இந்த அப்டேட் தமன்னா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.தெலுங்கு நடிகர் சுனில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.