பாசிர் கூடாங், பிப் 25 – நேற்று மாலை ஜோகூர், பாசிர் கூடாங் Tanjung Langsat தொழிற்பேட்டையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில், இரு தொழிலாளர்களுக்கு தீப்புண் காயங்கள் ஏற்பட்டன. மேலும் ஒருவர் வெடிப்பு சத்தம் கேட்டு உயரத்திலிருந்து குதித்ததில், கால் உடைந்ததாக, Seri Alam மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
மாலை மணி 5.16 அளவில் அந்த தொழிற்சாலையில் உள்ள இரு சிமென்ட் தொட்டிகள் வெடித்து சேதமடைந்ததைத் தொடர்ந்து தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. முன்னதாக, அத்தொழிற்சாலையில் இருந்து தீ ஜூவாலைகள் கிளம்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.