கோலாலம்பூர், ஜன 5 – 1,511 ஆம் ஆண்டில் மலாக்கா சாம்ராஜ்யம் போர்த்துகீசியர்களால் கவிழ்க்கப்பட்ட பிறகு மலாக்கா அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாட்டில் பல இடங்களில் சிதறிக் கிடப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆகக்கடைசியாக ராணி Kanega Hyang Isana என்பவரின் மகுடம் சூடும் சடங்கு ரப்பர் தோட்டத்தில் நடைபெற்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. நெகிரி செம்பிலான், ஜெலுபு, Kaki Bukit Salai என்னுமிடத்தில் பிப்ரவரி 2 ஆம்தேதி மாலை மணி 3.22க்கு நடைபெற்ற ராணியின் அந்த மகுடும் சூடும் சடங்கு குறித்த காணொளியை சமுக வலைத்தளத்தில் அதிகமானோரால் பகிரப்படுகிறது.