Latestமலேசியா

ரமலான் சந்தைகளில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க Dron பயன்படுத்தப்படுகிறது

கோலாலம்பூர், மே 5 – தலைநகரில் , ரமலான் சந்தைகளில், மக்கள் SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிப்பதற்காக, போலீசார் ,Dron  ஆளில்லா சிறுரக விமானங்களை பயன்படுத்துகின்றனர்.

அந்த ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கியின் மூலமாக அவ்வப்போது, மக்களுக்கு  கட்டுப்பாடுகள் தொடர்பில்  எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

இவ்வேளையில், அந்த ட்ரோன் மூலமாக , ரமலான் சந்தைகளில் பதிவு செய்யப்படும் படங்களையும் காணொலிப் பதிவுகளையும் போலீசார்,  தங்களது நடவடிக்கை அறையிலிருந்து பார்க்க முடியும்.

அதன் அடிப்படையில்,  சந்தைகளில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் போலீசார் எடுப்பர்.

இதனிடையே, ட்ரோன் மூலமாகவும், நேரடியாக களத்தில்  இறங்கி போலீசாரும் மேற்கொள்ளும் கண்காணிப்பு நடவடிக்கைகள், ராயா பெருநாள் கொண்டாட்டம் வரை தொடருமென, டாங்க் வாஙி மாவட்ட போலீஸ் தலைவர் மொஹமட் சய்னால் அப்துல்லா தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ரமலான் சந்தைகளில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்படுமென, ஏற்கனவே  தேசிய போலீஸ் படைத் தலைவர்  டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி  கூறியிருந்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!