அலோர் காஜா, பிப் 7- அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஒரு நாளைக்கு 30 லட்சம் முட்டைகள் மட்டுமே கையிருப்பில் இருக்கும் அளவுக்கு முட்டை உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என நம்பப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் கோழிகளின் தீவினத்துக்கான விலை அதிகரித்துள்ளது. இதனால், கோழி வளர்ப்புக்கான செலவைக் குறைக்க கோழிகள் பெரிதாகுவதற்கு முன்பே அவை விற்கப்பட்டு விடுகின்றன. இதனால் பண்ணைகளில் முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மலேசிய விவசாயிகள் சங்கங்களின் சம்மேளத்தின் துணை தலைவர் Lee Yoon Yeau தெரிவித்தார்.
எனவே, ரமலான் மாதத்திற்குள் ஒரு முட்டை விலையை 40 அல்லது 42 சென்னுக்கு அதிகரித்து உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் , நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அவர் கூறினார். தற்போது நாட்டில் , மக்களின் பயன்பாட்டுக்கு சராசரி 3 கோடி முட்டைகள் தினசரி தேவைப்படுகின்றன.