போபால், பிப் 14 – ரயில் தண்டவாளத்தைக் கடப்பது ஆபத்து என அறிந்தே அந்த தவறை சிலர் இன்னும் செய்துக் கொண்டு இருக்கின்றனர்.
அவ்வகையில் மத்திய பிரதேசம், போபாலில் ( Bhopal), 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது, திடிரேன சரக்கு ரயில் நெருகி வருவதைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் போனார். அவர் பயத்தில் தடுமாறி கீழே விழுந்ததைக் கண்டு , குடும்பத்தினர் உட்பட அங்கிருந்தவர்கள் பதறி போயினர்.
மரணம் சரக்கு ரயில் ரூபத்தில் நெருங்கிக் கொண்டிருக்க , ஆடவர் ஒருவர் திடீரென தண்டவாளப் பகுதியில் குதித்து, கீழே விழுந்த பெண்ணின் தலையை தண்டவாளத்துடன் அழுத்திக் கொண்டார்.
ரயில் அவர்கள் மீது கடந்து செல்ல, தண்டவாளத்தில் இருந்து அந்த ஆடவரும் பெண்ணும் உயிருடன் எழுந்து வருவதைக் கண்டு , சுற்றியிருந்த மக்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.