Latestமலேசியா

கோலாலம்பூர் கோபுரத்திலுள்ள, ‘அட்மாஸ்பியர் 360’ சுழலும் உணகவகத்தை உடனடியாக காலி செய்ய உத்தரவு

கோலாலம்பூர், டிசம்பர் 22 – மெனாரா கோலாலம்பூரில், 282 அடி உயரத்தில் அமைந்திருக்கும், அட்மாஸ்பியர் 360 (Atmosphere 360) சுழலும் உணவகத்தை உடனடியாக காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த உணவகத்தின் செயல்பாடுகள் நேற்று தொடங்கி நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த உத்தரவுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட வளாகத்தை காலி செய்யபடுத்தாண்டு ஜனவரி நான்காம் தேதி வரையில், இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை, அந்த சுழலும் உணவகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

Hydroshoppe நிறுவனத்துக்குச் சொந்தமான, கோலாலம்பூர் கோபுரத்தின் வழக்கறிஞர், அந்த நீதிமன்ற உத்தரவு குறித்து தங்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.

அதே சமயம், நேற்று காலை, வாடிக்கையாளர்கள் அதிகமானோர் உணவருந்திக் கொண்டிருந்த சமயத்தில், அட்மாஸ்பியர் 360 சுழலும் உணகவத்திற்கு திடீர் வருகை புரிந்த உயர்நீதிமன்ற ஜாமின் அதிகாரி, உணவகத்தை உடனடியாக காலி செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, Hydroshoppe நிறுவனத்துக்கும், அதன் இயக்குனர்களில் ஒருவருக்கும் எதிராக, இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில் இரு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

முன்னாள் தொடர்பு பல்லூடக அமைச்சர் டான் ஸ்ரீ அன்னுவார் மூசாவிற்கு இலாபம் கிட்டும் வகையில், தொழிலதிபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் வீதம் 15 ஆண்டுகளுக்கு கையூட்டு வழங்கிய குற்றமும் அதிலடங்கும்.

குறிப்பாக, கோலாலம்பூர் கோபுரத்தையும், அதன் நிர்வாகத்தையும் பெறுவதற்கான நடைமுறைகளை விரைவுப்படும் நோக்கத்திற்காக அந்த கையூட்டு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

எனினும், Hydroshoppe நிறுவனத்தின் இயக்குனரான 49 வயது டத்தோ அப்துல் ஹமிட் ஷெக் அப்துல் ரசாக் செக், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!