Latestஇந்தியா

ரயில் தடம் புரண்டது; எழுவர் மரணம்; 50 க்கும் மேற்பட்டோர் காயம்

புதுடில்லி, ஜன 15 – மேற்கு வங்காளத்தில் ரயில் தடம் புரண்டதில் ஏழு பயணிகள் மாண்டனர். Guwahati க்கு சேவையில் ஈடுபட்டிருந்த பிகானீர் – குவாஹட்டி விரைவு ரயில் நேற்று மாலையில் தடம் புரண்டது. Express ரயில் பெட்டிகள் தடம் புரண்டபோது அந்த ரயிலில் மொத்தம் 1,050 பயணிகள் பயணம் செய்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் Jalpaiguri மாவட்டத்தில் நேற்று மாலையில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

இடிபாடுகளிலிருந்து 250 பயணிகள் மீட்கப்பட்டனர். அந்த ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றபோது பயணிகள் அமர்ந்திருந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அந்த ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகள் அறுவடை திருநாளின் இறுதி நாளான்று நடைபெறும்கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அசாம் சென்றவர்களாவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!