ரவாங், ஆகஸ்ட்-30 -சிலாங்கூர், ரவாங், பண்டார் தாசிக் புத்ரியில் போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற பதின்ம வயது பையன்கள் அதில் தோல்வி கண்டனர்.
வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நூர் அரிஃபின் மொஹமட் நாசிர் (Noor Arifin Mohammad Nasir) உறுதிபடுத்தினார்.
அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், புரோட்டோன் வீரா ஏரோபேக் காரில் சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த மூவரை கண்டு நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர்.
எனினும், காரை நிறுத்தாமல் அவர்கள் வேகமாகச் செல்லவே, போலீஸ் துரத்திச் சென்று பிடித்தது.
அதிலிருந்த மூவரும் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவர்கள் ஆவர்; மூவருக்குமே காரோட்டும் உரிமம் கிடையாது.
அக்கார், அம்மூவரில் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படுகிறது.
அம்மூவரை போலீஸ் கைதுச் செய்யும் 31 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.