கோம்பாக், செப்டம்பர் -21 – ரவாங், Bandar Country Homes பகுதியில் குளோபல் இக்வான் நிறுவனத்தின் ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில், சிலாங்கூர் போலீஸ் இன்று அதிரடிச் சோதனை நடத்தியது.
காலை 6.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் 50 அதிகாரிகளும் 200 போலீஸ் வீரர்களும் பங்கேற்றனர்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கடைகளில் உணவகங்கள், கார் பட்டறைகள், துணிக் கடைகள், ஹோட்டல், அச்சகம், பேரங்காடி, கேக் கடை, ஊடகச் சேவை மையம் உள்ளிட்டவையும் அடங்கும்.
அவையனைத்தும் குளோபல் இக்வான் பெயரைப் பயன்படுத்தி வருபவையாகும்.
அவ்வளாகங்களில் காணப்பட்ட சிறார்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குளோபல் இக்வான் நிறுவனம் அனுமதியின்றி எழுப்பிய சில கட்டுமானங்கள் இடிக்கப்பட்டதோடு, சில கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
போலீஸ் சோதனைக்காக Jalan Desa-விலுள்ள அவ்வணிக வளாகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டுள்ளது.