கோம்பாக், ஏப்ரல் 8 – சிலாங்கூர், ரவாங்கிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், ஈப்போவை நோக்கி செல்லும் பாதையில், நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆடவர் ஒருவர், பல வாகனங்களால் மோதப்பட்டு உயிரிழந்தார்.
அச்சம்பவம் தொடர்பில், நேற்றிரவு மணி 10.55 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, கோம்பாக் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் அரிப்பின் முஹமட் நாசிர் உறுதிப்படுத்தினார்.
நெடுஞ்சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறத்தை நோக்கி கடந்து செல்ல முற்பட்ட பாதசாரி ஒருவரை வாகனம் ஒன்று மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அதனால் தூக்கியெறியப்பட்ட அவ்வாடவர் பின்னர் அவ்வழியே பயணித்த இதர வாகனங்களால் மோதித் தள்ளப்பட்டதில், நசுங்கி உயிரிழந்தார்.
சடலம் சவப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.