ரவாங், ஆகஸ்ட் 22 – 85 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட ரவாங், பத்து அராங் தமிழ்ப்பள்ளிக்கு இதுவரை அதிகாரப்பூர்வ நிலப்பட்டா கிடைக்கவில்லை. தற்போது அந்த பள்ளி அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளரும் யார் என்ற விவரமும் தெரியவில்லை என அறியப்படுகிறது.
இதனிடையே பத்து அராங் தமிழ்ப்பள்ளியின் நிலப்பட்டாவைப் பெற இன்று இப்பள்ளியில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இப்பள்ளியின் நில உரிமையைப் பெற்று அதன் எதிர்காலத்தைப் பாதுகாக்க, பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி வாரிய தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருடன், மலேசியத் தமிழ்க் கல்வி கூட்டமைப்பின் பிரதிநிகளுடன் இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக தமிழ்க்கல்வி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேலன் தெரிவித்தார்.
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக மாநில கல்வி இலாகாவையும் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுருப்பதாகவும் வெற்றிவேலன் கூறினார்.