ரவாங், செப்டம்பர்-25 – பச்சிளங் குழந்தையின் எலும்புக்கூடு Rawang Bypass நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பழைய சாமான்களைச் சேகரித்துக் கொண்டிருந்த 53 வயது உள்ளூர் ஆடவரின் கண்ணில் நேற்று மதியம் அது தென்பட்டது.
உடனடியாக அவர் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, குழந்தைப் பிறப்பை மறைக்கும் நோக்கில் அதனை வீசியதன் பேரில், குற்றவியல் சட்டத்தின் 318-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக உலுசிலாங்கூர் போலீஸ் கூறியது.
அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உலு சிலாங்கூர் போலீசை தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.