
கோலாலம்பூர், மார்ச் 30 – மலாக்காவின் புதிய முதலமைச்சருக்கான வேட்பாளராக Tanjung Bidara சட்டமன்ற உறுப்பினர் Ab Rauf Yusoh முன்மொழியப்பட்டிருப்பதை, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, புதிய முதலமைச்சர் நாளை பதவியேற்கவிருப்பதாக மாநில அரசாங்கச் செயலாளர் Zaidi Johari தெரிவித்திருந்தார்.
அந்த பதவியேற்பு சடங்கு நாளை மதியம் மணி 3.00-க்கு, மாநில யங் டி பெர்துவா ( Yang DiPertua ) அலுவலகத்தின் , Dewan Sri Utama மண்டபத்தில் நடைபெறுமென அவர் குறிப்பிட்டார்.
2021 நவம்பர் 20 – இல் நடைபெற்ற அம்மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து, அம்மாநில தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.
மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்கா அரசாங்க நிர்வாகத்தில் மாற்றம் நிகழுமென சாஹிட் கடந்த மார்ச் 27 –ஆம் தேதி உறுதிப்படுத்தியிருந்தார்.