Latestமலேசியா

கிள்ளான் பண்டார் BOTANIC வட்டாரத்தில் டாக்டர் விஜயேந்திரன் தலைமையில் 500 செடிகள் நடும் இயக்கம் தொடங்கப்பட்டது

கிள்ளான், மார்ச் 10 – நாம் வாழும் இடம் பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஏற்ப இன்று கிள்ளான் பண்டார் ‘BOTANI’கில் பொட்டானிக்கில் பினாங்கு துறைமுக வாரியத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ‘Vijayaindiaran Visvalingam’ தலைமையில் 500 செடிகள் நடும் இயக்கம் தொடங்கப்பட்டது. ‘SV Bunga Resources Swastic Organics Soil’ நிறுவனத்தை நடத்திவரும் ‘S.P Vishu’ மேற்பார்வையில் இந்த இயக்கம் இன்று தொடங்கப்பட்டது. Bandar Botanic கில் இயற்கையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்தில் கிள்ளான் மாநகர் மன்றம் தேர்வு செய்த இடங்களில் இந்த செடிகளை நடும் இயக்கம் நடந்தது.

இந்த இயக்கத்திற்காக தமது சொந்த செலவில் 500 செடிகளை வாங்கி கிள்ளான் துறைமுகத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியுமான டாக்டர் ‘Vijayaindiran’ அன்பளிப்பு செய்துள்ளார். பெர்சியாரான் பண்டார் ‘Botanic’கில் செடிகள் மற்றும் தாவரங்களை விற்பனை செய்துவரும் ‘SV Bunga’ நிறுவனத்தை நடத்திவரும் ‘SP Vishu’ மேற்பார்வையில் பண்டார் பொட்டனிக்கில் குடியிருக்கும் இடைநிலைப்பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். வேப்பமர கன்றுகள், விலாப்பழ கன்று, வாழை மரக் கன்றுகள் மற்றும் மக்களுக்கு தேவையான செடிகள் வெற்றிகரமாக நடப்பட்டது.

இந்த முயற்சியில் பொது இயக்கங்கள் அல்லாது தன்னார்வ அமைப்புகள், தமிழ்ப்பள்ளிகள் முன்வந்தால் அவர்களுக்கு தேவையான செடிகள், உரங்கள் போன்றவற்றை வழங்குவதற்கு தாம் முன்வருவதாக ‘Vishu’ கூறினார். விவசாய கலைகளில் மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் செடிகள் நடும் இயக்கம் பெரிய அளவில் உதவ முடியும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!