கீவ் , பிப் 17 – ரஷ்யா படையெடுப்பை நடத்தினால் அதனை எதிர்நோக்குவதற்கு உக்ரைய்ன் தயாராய் இருப்பதாக அந்நாட்டின் அதிபர் Volodymyr Zelensky அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் படை பலத்தைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. அமைதியை நாங்கள் விரும்புகிறோம். அதே வேளையில் ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கவும் உக்ரேய்ன் தயார் என Volodymyr ZelensKy தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள் புதிதாக வழங்கிய பீரங்கி கவச வாகனங்களுடன் உக்ரேய்ன் படைகள் மேற்கொண்ட ராணு பயிற்சியை பார்வையிட்ட பின் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
அதே வேளையில் தனது படைகளை ரஷ்யா மீட்டுக்கொண்டதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லையென நேட்டோ கூட்டணி தெரிவித்துள்ளது.