டாவோஸ், மே 26 – ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் நவீன ராக்கெட் முறை சாதனங்கள் தேவையென உக்ரைய்ன் கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து Davos சில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார கருத்தரங்கில் உரையாற்றியபோது உக்ரைய்ன் வெளியுறவு அமைச்சர் Dmytro Kuleba இந்த அறைகூவலை விடுத்தார். Donbas வட்டாரத்தில் போர் முனையில் மிகவும் மோசமான நெருக்கடியை இப்போது உக்ரைய்ன் துருப்புக்கள் எதிர்நோக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இரண்டாவது உலகப் போரைவிட மிகவும் மோசமான நிலைமை Donbas வட்டாரத்தில் காணப்படுகிறது. அங்குள்ள சில கிராமங்களும் நகரங்களும் இப்போது இல்லை. அவற்றை ரஷ்ய படைகள் தரைமட்டமாக்கிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close
-
வெள்ள தடுப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்2 hours ago