மோஸ்கோ, ஆகஸ்ட்-16சதுரங்க (செஸ்) விளையாட்டின் போது எதிராளியைத் தோற்கடிப்பதற்காக செஸ் போர்டில் விஷம் தடவிய ரஷ்ய வீராங்கனை கைதாகியுள்ளார்.
40 வயது அமீனா (Amina Abakova), போட்டி வீராங்கனைக்குத் தெரியாமல், இரகசியமாக செஸ் போர்டில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனத்தைத் தடவியுள்ளார்.
எதிர்தரப்பு வீராங்கனையான ஓஸ்மனோவா (Osmanova) அரைமணி நேரங்களில் தலைச் சுற்றல், குமட்டல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டார்.
எனினும், உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார்.
என்றாலும் அதற்கு பின்பும் விளையாடி அவர் பரிசை வென்று விட்டார்.
‘விஷத்தை’ தடவும் காட்சிகள் வீடியோவில் வெளியானதால் வசமாக சிக்கிக் கொண்ட அமீனா அதனை ஒப்புக் ஒண்டார்.
ஆனால், ஒஸ்மானோவாவுக்கு காயம் விளைவிக்க நான் நினைக்கவில்லை; அவருக்கு பயத்தை உண்டாக்கி போட்டியில் தோற்கடிக்கவே எண்ணினேன் என அமீனா கூறினார்.
போட்டிக்கு முன்பே இருவருக்கும் ஒத்துப் போகாதென்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது கைதாகியுள்ள அமீனா, சதுரங்க விளையாட்டில் ஈடுபட வாழ்நாள் தடையை எதிர்நோக்கியுள்ளார்.
அவர் இப்போது செய்யும் வேலையிலிருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, விரைவிலேயே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.