Latestஉலகம்மலேசியா

ரஷ்யாவில் வங்கி பிரச்சனையுள்ள மலேசிய மாணவர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

கோலாலம்பூர், மார்ச்  6 –  பண பரிவர்த்தனை செய்வதில் அல்லது இதர பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் ரஷ்யாவிலுள்ள மலேசிய மாணவர்கள்   மோஸ்கோவிலுள்ள  மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உக்ரேன் படையெடுப்பால்  ரஷ்ய வங்கிகள்  மீது விதிக்கப்பட்ட தடையினால் , அந்நாட்டிலுள்ள மலேசிய மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதிலும், பணத்தை வெளியேற்றுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக, புகார்கள் பெறப்பட்டிருப்பதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.

ரஷ்யாவில்  861 மலேசியர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் 784 பேர்  மாணவர்கள் ஆவர்.   மோஸ்கோவிலுள்ள மலேசிய தூதரகத்தில் மட்டும் 44 மலேசியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!