பெர்லின், பிப் 25 – உக்ரைய்ன் மீது படையெடுப்பை நடத்தியிருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் அதிகமான தடைகளை அமல்படுத்த வேண்டும் என G 7 எனப்படும் ஏழு தொழில்மய நாடுகள் முடிவு செய்துள்ளன.
கடுமையான பொருளாதார மற்றும் நிதி தடைகளும் இவற்றில் அடங்கும். உக்ரைய்னுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு அனைத்துலக மக்கள் கடுமயான கண்டனம் தெரிவிக்க வேண்டுமென ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டனர்.
அனைத்துல சட்டங்களுக்கு எதிராக உக்ரைய்னுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் அமைந்திருப்பதாகவும் இது ஐரோப்பாவில் பெரிய விளைவு ஏற்படுத்தும் என்றும் ஜி 7 இயக்கம் தெரிவித்துள்ளது.