லண்டன், பிப் 23 – ரஷ்யாவின் ஐந்து பொருளகங்கள் மற்றும் மூன்று கோடிஸ்வரர்களுக்கு எதிராக பிரிட்டன் இன்று தடையை அமல்படுத்தியது.
உக்ரைய்ன் விவகாரத்தில் இது முதல் கட்ட தடையாக இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் Boris Johnson தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது Boris Johnson விவரித்தார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஐந்து கோடிஸ்வரர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு சம்பந்தப்பட்ட அந்த மூன்று கோடிஸ்வரர்களும் பிரட்டனில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.