நியூயார்க் , பிப் 25 – ரஷ்ய அதிபர் விலடிமர் புதினின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோப் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை விதித்துள்ளது.
அவர்களது ஐரோப்பிய ஒன்றிய சொத்துக்களும் முடக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களுக்கு பயணத் தடை விதிக்கப்படவில்லை என பி.பி.சி செய்தி வெளியிட்டது. பிரிட்டனும் இதே போன்ற தடையை விதித்துள்ளது.