கோலாலம்பூர், மார்ச் 2 – மலேசியாவுக்கு புறப்பட்டுள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கொள்கலன் கப்பல் இம்மாதம் 5ஆம் தேதி நெகிரி செம்பிலன், Kuala Linggi யில் நங்கூரமிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்கலன் கப்பல் Kuala Lingi யில் உள்ள அனைத்துலக துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்தது. Linda என்ற அந்த கப்பல் ரஷ்ய சம்மேளனத்திற்கு எதிரான வெளிநாட்டின் தடையில் சம்பந்தப்பட்டுள்ளதாக இவ்வார தொடக்கத்தில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
எந்தவொரு தடைகளையும் மீறக்கூடாது என்பது துறைமுக அதிகாரிகளின் சிறப்பு உரிமையாக அந்த உத்தரவு அமைந்துள்ளதாக பேக்குவரத்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.