கீவ், பிப் 28- உலகின் மிகப்பெரிய விமானமான Antonov-225 ரக விமானம், உக்ரெய்னின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் சிதைந்தது.
உக்ரேனிய மொழியில் கனவு எனும் பொருள்கொண்ட ‘மிரியா’ (Mriya) என அழைக்கப்படும் அந்த விமானம், Kyiv விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளானது.
இதனிடையே, ரஷ்யா எங்களின் ‘கனவை’ அழித்திருக்கலாம். ஆனால், வலுவான, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக உருவெடுக்கும் உக்ரெய்னின் கனவை கலைக்க முடியாது என அதன் வெளியுறவு அமைச்சர் Dmytro Kuleba டுவிட்டரில் சூளுரைத்திருக்கின்றார்.
கிட்டதட்ட ஒரு கால்பந்து மைதானத்தை விட அகலம் கொண்ட மிரியாவை மீண்டும் சீர்செய்ய கிட்டதட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் எனவும் அந்தச் செலவை ரஷ்யாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் Dmytro கூறினார்.