Latestஉலகம்

ரஷ்ய தாக்குதலை முறியடிக்கும் எறிபடைகள்தான் உக்ரேய்னுக்கு தேவை அமெரிக்கா வலியுறுத்து

வாஷிங்டன், மார்ச் 11 – உக்ரைய்னுக்கு இப்போதைக்கு MIG போர் விமானங்கள் தேவையில்லை. மாறாக ரஷ்யா தாக்குதலை முறியடிப்பதற்கு தரையிலிருந்து விண்ணில் பாய்ச்சக்கூடிய எறிபடைகள் போன்ற ஆயுதங்கள்தான் தேவை என அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இதன்வழி ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை உக்ரைய்ன் தகர்த்தெறிய முடியும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Ned Price தெரிவித்தார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைய்னுக்கு போர் விமானங்களை அனுப்பிவைக்கும்படி உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelensky தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.

ரஷ்யாவின் தரை தாக்குதலை ஆக்கப்பூர்வமாக தடுத்து பதில் தாக்குதல் நடத்தக்கூடிய விவேகமான தற்காப்பு ஆயுதங்களை உக்ரைய்ன் கொண்டுள்ளது. எனவே தரையிலிருந்து விண்ணில் பாய்ச்சப்படும் எறிபடை போன்ற ஆயுதங்கள்தான் உக்ரைய்னுக்கு தேவை என Ned Price வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!