கோலாலம்பூர், பிப் 25 – உக்ரைய்னுக்கு எதிராக படையெடுப்பை மேற்கொண்டதைத் தொடர்ந்து கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கிலுள்ள ரஷ்ய தூதரகப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வர் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Azmi Abu Kassim தெரிவித்தார்.
தூதரகத்தில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.