Latestஉலகம்

ரஷ்யாவில் சிறையில் இருந்துவந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி காலமானார்

மாஸ்கோ, பிப் 17 – ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் விளாதிமிர் பூட்டினை கடுமையாக விமர்சித்து வந்தவருமான அலெக்ஸி நாவல்னி காலமானார். அரசாங்கத்தை எதிர்த்து வந்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் ‘Arctic Penal Colony’ சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். 47 வயதாகும் அவர், சிறையில் நடந்த பின், திடீரென மயக்கம் அடைந்தததாகவும் மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டதால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இதனிடையே அவரது மரணத் செய்தியை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகங்களுக்கு வெளியே திரண்ட நாடு கடந்து வாழும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் எதிர்ப்பு கூட்டங்களை நடத்தினர். அவர்கள் ரஷ்ய அதிபர் பூட்டினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு அலெக்ஸி நாவல்னி மரணத்திற்கு பூட்டின் பொறுப்பு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!