கீவ் , பிப் 28 – ரஷ்ய படைகளின் தாக்குதலால் திக்குமுக்காடிவரும் உக்ரைய்னுக்கு உதவும் பொருட்டு உடனடியாக ஏவுகணைகனை அனுப்புவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
போர் விமானங்களை எதிர்கொள்ளும் ஏவுகனைகளை நேரடியாக வழங்க அமெரிகா முடிவு செய்துள்ளது. ரஷ்ய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்துவதற்கு அந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளும் உக்ரைய்னுக்கு உடனடியாக ஆயுதங்கள் வழங்குவதாக அறிவிததுள்ளன.