
கோலாலம்பூர், நவ 2 – ரஹ்மா ரொக்க தொகைக்கான இவ்வாண்டின் கடைசி நிதியை தீபாவளிக்கு முன்னதாக 55 லட்சம் மக்கள் பெறுவர். 2.1 பில்லியன் சம்பந்தப்பட்ட இந்த நிதி நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக வழங்கப்படும், 1,200 ரிங்கிட் ரொக்க உதவித் தொகையை 5.22 மில்லியன் மக்கள் பெற்றுள்ளனர். மேல்முறையீட்டை தொடர்ந்து எஞ்சியோர் அந்த உதவித் தொகைக்கு தகுதி பெற்றனர். தங்களது தகுதி மற்றும் பிரிவுக்கு ஏற்ப 2,500 ரிங்கிட் வரையிலான ரஹ்மா உதவித் தொகையை அவர்கள் பெறுவார்கள்.
வாழ்க்கை செலவின சவால்களை சமாளிப்பதற்காக உதவும் இந்த நிதியின் மூலம் 8.7 மில்லியன் பேர் நன்மையடையும் பொருட்டு அரசாங்கம் இவ்வாண்டு 8 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது. அடுத்த ஆண்டுக்கு ரஹ்மா ரொக்க தொகையை பெறுவதற்கு தகுதி பெறும் தனிப்பட்டோர் இன்று முதல் புதிய விண்ணப்பங்களை அல்லது விண்ணப்பங்களை புதுப்பிப்பதற்கு மனு செய்யலாம்.