
அலோர் ஸ்டார், மார்ச் 25 – ஹரி ராயா பெருநாளுக்குப் பின்னர், இளைஞர் விளையாட்டு அமைச்சு, Rakan Muda திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கவுள்ளது.
அடிப்படையில் அந்த திட்டம் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு புத்துயிர் கொடுத்து முக்கியத் திட்டமாக உருவெடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக, துணையமைச்சர் Adam Adli Abdul Halim தெரிவித்தார் .
அந்த திட்டத்தின் வாயிலாக இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரமுடியுமென்பதோடு, தன்னார்வல அடிப்படையில் உதவும் பண்பினையும் வளர்க்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.